rss
twitter
    பொதுச் செயலாளர் திரு. அரங்கராஜன் பற்றி....

dinsdag 12 oktober 2010

தேவேந்திர முன்னேற்ற முன்னனியின் பொதுச் செயலாளராக மார்ச் 2010ம் ஆண்டு பொறுப்பேற்ற திரு. அரங்கராஜன், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் 1951ம் ஆண்டு பிறந்தவர். B.Com பட்டதாரியான இவர், 1970ம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு பெற்று இளநிலை உதவியாளராக தனது அரசுப் பணியை ஆரம்பித்தார். எடுத்துக் கொண்ட பணியில் திறம்பட செயல்பட்டதன் விளைவாகவும், பணி மூப்பின் அடிப்படையிலும் நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 30-06-2009ல் ஓய்வு பெற்ற திரு. அரங்கராஜன், தான் பணிபுரிந்த காலத்திலேயே தொழிற்சங்கம் மூலமாக பல்வேறு சமூக சேவைகளையும், நமது சமூகத்திற்கான சேவைகளையும் செய்தவர். 1976 முதல் 1983 வரை திருத்துறைப்பூண்டியின் சஎஞ (சச்ஙூ-எஹடிக்ஞ்ஞ்க்க்ஷ ஞகிகிகூஷகூஹஙீசூ) சங்கத்தின் தாலுகா செயலாளராகவும், 1984 முதல் 1986 வரை பொதுப்பணித்துறையின் தஞ்சை மாவட்ட செயலாளராகவும் திறம்பட செயல்பட்டவர். 1986 முதல் 2006 வரை சஎஞ சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளராக பணியாற்றிய திரு. அரங்கராஜன், 2007ம் ஆண்டு தஞ்சை மாவட்ட தலைவராக பொறுப்பேற்று ஜீன் 2009 வரை அந்த பொறுப்பிலும் சீரும், சிறப்புமாக செயலாற்றியவர்.

திரு.அரங்கராஜன் அவர்களின் நிர்வாகத் திறமைக்கும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மைக்கு சான்றாகவும், அவற்றைப் போற்றும் விதமாகவும் பல்வேறு மாநிலப் பொறுப்புகளும் அவரைத் தேடி வந்தன. 1990ல் சஎஞ சங்க மாநில தணிக்கையாளராக பதவியேற்று அதில் 2006ம் ஆண்டு வரை பணியாற்றினார். ஜீன் 2004ல் மாநிலப் பொதுப்பணித் துறை செயலாளராக திரு.அரங்கராஜன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு, அவரது பல்வேறு சேவைகளுக்கு அளிக்கப்பட்ட மகுடத்தில் மற்றுமொரு மாணிக்க கல்லாக அமைந்தது. டிசம்பர் 2007 வரை அந்தப் பதவியில் சிறப்பாக செயல்பட்ட திரு.அரங்கராஜன் அவர்களுக்கு, ஜனவரி 2008ல் மாநில பொதுப்பணித் துறை தலைவர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. ஜீன் 2009ல் தமிழக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், மாநிலப் பொதுப்பணித் துறை தலைவர் பதவியில் இருந்தும் பிரியாவிடை பெற்றார். ஜனவரி 2010 முதல் தேவேந்திர முன்னேற்ற முன்னனியின் அறிவுசார் குழுமமான ஈஉஉஈன் இயக்குநராக பொறுப்பு வகித்த இவர், தற்போது தேவேந்திர முன்னேற்ற முன்னனியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு, இன மக்களை ஒருங்கிணைக்கும் பொருட்டும், அவர்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தரும் பொருட்டும் தற்போது தன்னை அர்பணித்துக் கொண்டுள்ளார்.